டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 29) தொடங்கியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல்செய்யப்படுகிறது. இதுதவிர எரிசக்தி சேமிப்பு திருத்த மசோதா, மின்சார திருத்த மசோதா, கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளைக் குறைக்க வகைசெய்யும் மசோதா, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்த மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.
முன்னதாக குளிர்காலக் கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று (நவம்பர் 28) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் முன்னதாக செய்தியாளரைச் சந்தித்த பிரதமர் மோடி, அவையை கண்ணியத்துடன் நடத்த எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார். அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குளிர்காலக் கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை