ETV Bharat / bharat

Winter Session of Parliament: நவ. 29இல் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் - மாநிலங்களவை கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் (Winter Session of Parliament) நவம்பர் 29ஆம் தேதிமுதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் அழைப்புவிடுத்துள்ளார்.

Lok Sabha session on November 29, Lok Sabha session, lok sabha, lok sabha meet, mp meet, மக்களவை கூட்டத்தொடர், மாநிலங்களவை கூட்டத்தொடர், parliament session
நவம்பர் 29இல் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
author img

By

Published : Nov 18, 2021, 10:03 AM IST

கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் (Winter Session of Parliament) கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அடுத்தடுத்த அனைத்து அமர்வுகள், வரவு-செலவுத் திட்ட அறிக்கை (பட்ஜெட்), பருவமழை, கரோனா தொற்று காரணமாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, நவம்பர் 29 அன்று, குளிர்காலக் கூட்டத்தொடரைத் தொடங்க குடியரசுத் தலைவர் அழைப்புவிடுத்துள்ளார்.

சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட கூட்டத்தொடர், நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடையும். மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும், உறுப்பினர்கள் தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அமருவார்கள்.

குளிர்காலக் கூட்டத்தொடரில் (Winter Session of Parliament), வளாகம், முக்கிய நாடளுமன்ற கட்டடத்திற்குள் நுழைபவர்கள் எப்போதும் முகக் கவசம் அணியவும், கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால் அதேசமயம் முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன.

இதையும் படிங்க: தலைமை நீதிபதியின் பணிகளை தற்காலிகமாக இவர்தான் கவனிப்பார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.