நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, விவசாய சட்டங்கள், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக, நாடாளுமன்றம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 14ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று(ஆகஸ்ட். 6) தொடங்கியது. அப்போது, மீண்டும் எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அதனால், அவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், பெகாசஸ் விவகார தொடர்பாக மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால், ஆகஸ்ட் 9ஆம் காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைகிறது.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம் - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு