டெல்லி : பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மதியம் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 1 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலிலேயே எதிர்க்கட்சி தலைவர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக இந்த விவகாரத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தாமாக முன்வந்து மாநிலங்களவையில் விளக்கம் ஒன்றை அளித்தார்.
இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மதியம் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 1 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : பெகாசஸ் விவகாரம்- நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் திட்டம்!