ETV Bharat / bharat

'கரோனா புதிய மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது' - அமைச்சர் ஜெய்சங்கர் - வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: கரோனா பெருந்தொற்று உலகத்தைப் புதியதொரு அதிகாரச் சமநிலையை நோக்கி பயணிக்க வைத்திருப்பதாக வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

jaishankar
jaishankar
author img

By

Published : Nov 12, 2020, 5:01 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆசிய மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆசியாவில் வளர்ந்துவரும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏற்கனவே உலகம் நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்த்திராத கரோனா பெருந்தொற்று நிலைமை மேலும் மோசமாக்கியது.

இதனால் நிறைய நாடுகள் தேசியப் பாதுகாப்பு வரையறையை விரிவுபடுத்தியுள்ளன. பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சேர்ந்து செயல்பட்டாக வேண்டிய நிலைமையில் இருக்கின்றன. இதன்மூலம் அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் புதியதொரு அதிகாரச் சமநிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலை இவ்வளவு விரைவாக வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் கரோனா அந்த நிலைக்கு வெகு விரைவாகவே உலகத்தைத் தள்ளியிருக்கிறது.

பழைய பாதை அழிந்து புதிய பாதையை நோக்கி உலகம் அடியடுத்து வைக்கிறது. இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக முக்கியத்துவம் பெரும்” என்றார்.

இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், “கரோனாவால் இந்தியப் பொருளாதாரம் சற்று இறக்கத்தைக் கண்டது. ஆனால், செப்டம்பர், அக்டோபரில் ஏற்றம் கண்டது நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது. வேளாண்மை, கல்வி, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் முன்னேற்றம் கண்டுவருகின்றன” என்று கூறினார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.