ஜெய்ப்பூர்: ஆசிரியர் ஒருவர் மாணவரின் முகத்திற்கு நேராக துப்பாக்கியை நீட்டிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், பாலி மாவட்டத்தில் உள்ள சுவாமி பரமானந்தா மகாவித்யாலயா கல்லூரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கல்லூரி, பிரபலமான ஓம் விஸ்வதீப் குருக்கள் சுவாமி மகேஷ்வரனாந்தா ஆஷ்ரமத்தை சேர்ந்ததாகும்.
கல்லூரிக்கு வந்த முன்னாள் மாணவரிடம், ஆசிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைமீறிப் போன நிலையில், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, அந்த முன்னாள் மாணவரின் நீட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கண்ட, அந்த மாணவருடன் வந்திருந்த மற்ற மாணவர்கள் சிலர் கல்லூரியில் தகராறில் ஈடுபட்டனர்.
அந்த மாணவர், அக்கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்த நிலையில், டீசி வாங்க வந்துள்ளார். அப்போது, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, சிவபுரி காவல் துறையினர் ஆசிரியரை கைது செய்து, அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் குண்டுகள் அடங்கிய மூன்று கேட்ரிட்ஜ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கல்லூரியில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களையும், அமைதிக்கு குந்தகம் விழைவித்ததாகக் கூறி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை தப்பியோட்டம்...