உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நாட்டின் முதல் சர்வதேச மத்தியஸ்தம் அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்குப் புகழாரம் சூட்டினார்.
நிகழ்வில் தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், "மத்தியஸ்தம் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு செய்வது என்பது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது.
நமது அன்றாட வாழ்விலேயே குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பிரச்சினைகளைப் பேசியே தீர்வு காண்கிறோம்.
நாட்டின் பொருளாதார சீர்திருத்ததங்களின் தந்தை நரசிம்ம ராவ், தெலங்கானாவின் மகன் ஆவார். அவரின் தலைமையில்தான் நாட்டின் பொருளாதார சீர்திருத்தம் தொடங்கப்பட்டது" என்றார்.
சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சினைகளை இந்த மத்தியஸ்த அமைப்பு தீர்த்துவைக்கும். இந்நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அவசரகாலப் பயன்பாட்டுக்கு 'சைகோவ்-டி' தடுப்பூசிக்கு அனுமதி