அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி நிறுவனர் அசாதுதீன் ஓவைசிக்கு, மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் என மேற்கு வங்க இமாம் அசோசியேஷன் தலைவர் முகமது யஹ்யா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முகமது யஹ்யா, ’மேற்கு வங்க தேர்தலில் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம். ஓவைசியின் அரசு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர் சொல்வதை மக்கள் பின்பற்றும் அளவுக்கு ஓவைசி ஒன்றும் காட்பாதர் இல்லை.
பாஜக, ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய இருகட்சிகளுமே மதரீதியானவைதான். பாஜக எப்படி வங்க தேசத்தை துண்டாட முயலுகிறதோ அதைத்தான் ஓவைசியின் கட்சியும் செய்ய துடிக்கிறது. தேர்தல் எல்லாருக்குமானது தானே தவிர, தனிப்பட்ட மதத்தினருக்கானது அல்ல.குறிப்பிட்டு சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுவது ஏன்? மத அடிப்படையில் வாக்குகள் கேட்பதை நிறுத்துங்கள்’ என்றார்.
இதையும் படிங்க:'அமித் ஷா கிட்ட சொல்லி மதக்கலவரம் பண்ணிடுவேன்': சிக்கன் ரைஸால் சிக்கலில் மாட்டிய பாஜக நிர்வாகி