ETV Bharat / bharat

நிலக்கரி திருடர்கள் நடத்திய தாக்குதலில் 2 சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு காயம் - பாக்மாரா

ஜார்க்கண்டில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிலக்கரி நிறுவனத்தில் இருந்து நிலக்கரியைத் திருடிய திருடர்களைத் தடுக்க முயன்றபோது இரண்டு சிஐஎஸ்எஃப் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

OVER 40 COAL THIEVES ATTACK IN CISF JAWAN FIRE IN AIR

author img

By

Published : Aug 17, 2022, 8:23 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் மாவட்டத்தின் பாக்மாராவில் உள்ள பிசிசிஎல் நிலக்கரி நிறுவனத்தின், நுழைவு வாயில்-2 பகுதியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியில் இருந்தனர். அப்போது, 30-40 பேர் அடங்கிய கும்பல், நிலக்கரியை திருடிச் செல்வதை காவலர்கள் பார்த்துள்ளார்கள். திருடர்களைத் தடுக்க காவலர்கள் சென்றபோது, அந்த கும்பல் சிஐஎஸ்எஃப் வீரர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயன்று, அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருடர்களின் தாக்குதலை அடுத்து, சிஐஎஸ்எஃப் வீரர்கள் தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர். திருடர்களின் தாக்குதலில், காவலர்கள் எம்.கே.சௌகான் மற்றும் சி.எஸ்.பாண்டே ஆகியோர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும், ரயில் தண்டவாளத்திற்கு இடையே திருடர்கள் இழுத்துச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பாக்மாரா போலீஸ் மற்றும் சிஐஎஸ்எஃப் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிஐஎஸ்எஃப் தளபதியும் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் பிறரிடம் சம்பவம் குறித்து விசாரித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பாக்மாரா காவல் நிலையத்தில் சிஐஎஸ்எஃப் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், சம்பவத்தின் போது சிசிடிவி செயலிழந்தது குறித்து சிஐஎஸ்எஃப் மூத்த அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாக்மாரா காவல் நிலைய போலீசார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவைக்கு நிலக்கரி திருடர்கள் மத்தியில் பயமில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு டஜனுக்கும் அதிகமான நிலக்கரி திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து திருடர்கள் தப்பிச்சென்றனர்.

அப்போது, திருடன் ஒருவனின் மொபைல், சம்பவ இடத்திலேயே தவறி விழுந்துள்ளது. அதைப் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு பைக்குடன் ஆற்றில் குதித்த இளைஞர்... வைரலான அபாய வீரசாகசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.