கரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், ஒன்றிய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தத் திட்டம் தற்போது ஓராண்டை கடந்துள்ள நிலையில், இதுவரை 90 லட்சம் பேர் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இதை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையான இந்தத் திட்டம் அரசிற்கு மிகப்பெரிய சவாலையும் பயிற்சியையும் அளித்துள்ளது. இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுளில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறந்தவர்கள் கனவுல வராங்க: கனடாவில் மூளையைத் தாக்கும் புதிய நோய்!