ETV Bharat / bharat

மாணவர்களிடையே பரவும் ஏஒய்.4.2 கரோனா... பள்ளிகள் மூடல்... - தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலை

பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களிடையே புதிய வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளை மூட மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
author img

By

Published : Nov 25, 2021, 4:03 PM IST

Updated : Nov 25, 2021, 4:31 PM IST

சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவர்களிடையே புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், திறக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே, 520 பள்ளி மாணவர்களுக்கும், 49 பணியாளர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2)

இவர்களில், பல மாணவர்களுக்கு உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக, கூறப்படுகிறது. இதனிடையே இன்று (நவ.25) ஒடிசா மாநிலத்தில் 70 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேர் மாணவிகள். இதன்காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதுஒருபுறமிருக்க மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மறுபரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Europe coronavirus: ஐரோப்பாவை மீண்டும் மிரட்டும் கரோனா - இரு நாடுகளில் லாக்டவுன்

Last Updated : Nov 25, 2021, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.