தேசிய சட்ட சேவை ஆணையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: "நாட்டின் சட்டத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.
சட்டத்தின் பயன் பெண்களுக்கு முறையான வகையில் சென்று சேர வேண்டும். நமது இலக்கானது பெண்கள் முன்னேற்றம் என்ற கட்டத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்பதை நோக்கிச் செல்ல வேண்டும்.
அண்ணல் காந்தியே ஒரு வழக்கறிஞர். நீதிமன்றங்களில் ஏழைகள், தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்" என்றார்.
நிகழ்வில் பங்கேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், "இந்த மே மாதத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு 106 நீதிபதிகளை கோலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. பல பெயர்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்னும் சில நாள்களில் மேலும் பலருக்கு அரசு ஒப்புதல் வழங்கவுள்ளது என சட்ட அமைச்சர் கூறியுள்ளார். காலியிடங்களை விரைந்து நிரப்பு உதவிவரும் அரசுக்கு என நன்றி" என்றார்.
இதையும் படிங்க: குடும்பச் சண்டையால் முடங்கிய 'லோக் ஜனசக்தி கட்சி' சின்னம்