ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதி - குறைவாக பயன்படுத்தப்பட்டதா?

மத்திய அரசு இதுவரை கரோனா தடுப்பூசி திட்டத்துகாக ரூ.4,744 கோடியை செலவழித்துள்ளது. இது இந்த நிதி ஆண்டின் மொத்த தடுப்பூசி பட்ஜெட்டில் 14 சதவிகிதத்துக்கும் குறைவானதாகும்.

vaccine budget
கரோனா தடுப்பூசி
author img

By

Published : May 8, 2021, 11:30 AM IST

Updated : May 8, 2021, 11:45 AM IST

கரோனா தடுப்பூசி சில மாநிலங்களில் தட்டுப்பாடு மற்றும் குறைவான அளவு போடப்பட்டுள்ளது போன்ற தொடர் பின்னடைவுகளால் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட ரூ.35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டை விட குறைவாக பயன்படுத்துகிறது என்பது கடந்த வாரத்தில் தினமும் 3,600க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களுடன், சராசரியாக தினமும் 3.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் இந்த தருணத்தில், தடுப்பூசி இயக்கத்தில் வேகத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், தமது அடுத்தடுத்த டிவிட் பதிவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1,104.78 கோடியும், இந்திய சீரம் மையத்துக்கு ரூ.3639.67 கோடியும் தரப்பட்டு மொத்தம் ரூ.4755.45 கோடி தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவிட்டுள்ளதாக கூறி உள்ளார்.

15 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என்ற ஆரம்பகட்ட ஆர்டருக்கான ரசீது தொகை ரூ.2353.09 கோடி சீரம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஆர்டர் விநியோகிப்பதற்காக ரூ.1732.50 கோடி முன்பணமாக சீரம் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

அனுராக் தாக்கூர் கூறியுள்ளபடி, சீரம் நிறுவனம் மொத்த மத்திய அரசின் ஆர்டரான 26.60 கோடி டோஸ் தடுப்பூசியில், இதுவரை 14.344 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மட்டுமே கொடுத்துள்ளது.

இதே போல, கோவேக்சின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மொத்தம் 8 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு இதுவரை மொத்தம் ரூ. 1104.78 கோடியை வழங்கி உள்ளது. இரண்டாவது கட்டமாக 5 கோடி தடுப்பூசிகளை மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விநியோகிப்பதற்கான முன் தொகையாக ரூ.787.5 கோடியும் சேர்த்தே இந்த தொகை தரப்பட்டுள்ளது.

எனினும், கடந்த நிதி ஆண்டில், இந்த இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும் எவ்வளவு தொகை தரப்பட்டது என்று அமைச்சர் டிவிட் செய்தியில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இந்த ஆண்டு தடுப்பூசி பட்ஜெட்டான ரூ.35,000 கோடியில் இருந்து தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு தரப்பட்டது என்றும் சொல்லப்படவில்லை.

உள்ளூர் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதால் தடுப்பூசி திட்டத்தின் வேகம் குறைந்து அதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், மரணங்களும் எதிர்பாராத விதமாக அதிகரித்திருப்பதாக சர்ச்சைகள் அதிகரித்த நிலையில், மத்திய இணையமைச்சர் இந்த தொடர் பதிவை வெளியிட்டுள்ளார். இதர நாடுகளில் உபயோகிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. முன் கூட்டியே அனுமதி கொடுத்திருந்தால், தடுப்பூசி பயன்பாட்டை அதிகரித்து நாடு முழுவதும் சீராக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.

மார்ச் மாத த்துக்குப் பின்னர் நாட்டின் இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு புதிதாக எந்த ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்று வெளியான செய்தியை இந்த வாரத்தின் தொடக்கத்தில், மத்திய அரசு மறுத்திருந்தது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த செய்தி உண்மையில்லை என்றும், தடுப்பூசி வழங்குவதற்கான ஆர்டர் ஏப்ரல் 28ம் தேதி தரப்பட்டது என்றும், 11 கோடி தடுப்பூசி சீரம் நிறுவனத்தில் இருந்தும், 5 கோடி தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்தும் மொத்தம் 16 கோடி தடுப்பூசிகளுக்கு புதிய ஆர்டர் தரப்பட்டது என்றும் கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்ட அதே தேதியில் ரூ. 2520 கோடி முன் தொகையாகத் தரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் இது வெறும் 7.5 சதவிகிதம் மட்டும்தான்.

மொத்த தொகை

இந்த ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கோவிட் தடுப்பூசி திட்டத்துக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார்.

“2021-22 நிதி ஆண்டுக்காக கோவிட் 19 தடுப்பூசி திட்டத்துக்காக ரூ.35,000 கோடியை நான் தருகின்றேன். தேவைப்பட்டால் மேலும் கூடுதலாக தடுப்பூசிக்கு நிதி தர நான் கடமைப்பட்டிருக்கின்றேன்,” என நிதி அமைச்சர் கூறினார். சுகாதாரத்துக்கான நிதியானது கடந்த 2020-21ம் நிதியாண்டில் ரூ.94,452 கோடி ஒதுக்கப்பட்டதை விடவும் இந்த நிதி ஆண்டில் ரூ.2,23,846 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகவும், இது 137 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

வியாழக்கிழமையன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பகிர்ந்துள்ள தற்போதைய புள்ளி விவரத்தின்படி, முந்தைய மற்றும் இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.4744.45 கோடி மட்டுமே தடுப்பூசி நிறுவனங்களுக்கு பணம் தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தடுப்பூசி நிதியில் இது 13.55 சதவிகிதமாகும்.

17.15 கோடி டோஸ் மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது

இப்போதைய புள்ளிவிரத்தின்படி, மத்திய அரசு இதுவரை (மே6ம் தேதி நிலவரப்படி) 17.15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுகாதாரப்பணியாளர்கள் இதுவரை 16.24 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 13.09 கோடிக்கும் அதிகமானோர் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுள்ளனர். 3.14 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகள் போட்டுள்ளனர்.

பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டம்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டத்தில் சுகாதாரப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்புபடை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட மூன்று கோடி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டது.

இரண்டாவது கட்டமாக மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டது. எனினும் 45 வயதுக்கும் மேற்பட்டோர்களில் 90 சதவிகிதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தால், அடுத்த மாதமே இந்த விதி தளர்த்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் மத்திய அரசின் வயது வரம்பு நிர்ணயம், எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

முன்எப்போதும் இல்லாத வகையில் மார்ச் 1ம் தேதி 11,500 என்ற அளவில் இருந்த புதிதாக தொற்றுப் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது மே 1ம் தேதி 3.9 லட்சமாக அதிகரித்ததால் ஒட்டு மொத்த நாடும், உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இப்போது மிக மெதுவாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் புதிய அரசின் கொள்கைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலைக்கும் இது காரணமாக அமைந்தது. மேலும் மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை நேரடியாக தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகரித்திருப்பதால், பல் வேறு இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Last Updated : May 8, 2021, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.