அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
திங்க்கோங்க் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, வெற்றிக்காக சந்தர்ப்பவாத அரசியலை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் அசாமில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் இணைந்து இடதுசாரிகளை எதிர்த்து களம் காணும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் அதே இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
இப்படி கொள்கையற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால், அசாமில் மீண்டும் கறுப்பு நாட்கள் திரும்பிவிடும். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என செயல்படும் காங்கிரஸ் ஒரு பிளவு சக்தியாகும். மக்களுக்கு சேவை செய்வதையே பிரதானமாக கொண்டுள்ள பாஜக, அசாமின் வளர்ச்சியை நோக்கியே திட்டங்களை முன்வைத்துவருகிறது என்றார்.
அசாமில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி(மார்ச் 27) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: உலகில் யாரும் கண்டிராத ராட்சத பூட்டு: ஆச்சரியமூட்டும் வயது முதிர்ந்த தம்பதியின் உழைப்பு!