காந்திநகர்: கரோனா பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு முன்பு பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அம்மாநில அரசு, திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவை அம்மாநில அரசின் www.digitalgujarat.gov.in. என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது அப்பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் முன் அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி தற்போது அம்மாநிலத்தில் 13 ஆயிரத்து 627 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்தனர். 2 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ள நிலையில், 85 லட்சத்து 27 ஆயிரத்து 111 ரத்த மாதிரிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் மீனவர்கள் கரை திரும்பவில்லை - குடும்பத்தினர் அச்சம்!