ETV Bharat / bharat

'ஒரே நாடு ஒரே தேர்தல்'; முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:19 PM IST

'One Nation, One Election' first meeting: 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் டெல்லியில் இன்று (செப்.23) நடைபெற்றது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளன.

'One Nation, One Election': In first meeting, Kovind-led panel decides to seek views from national, state political parties
'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் இன்று நடைபெற்றன

டெல்லி: 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் டெல்லியில் இன்று (செப்.23) நடைபெற்றது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனை இன்று இந்தியா கேட் அருகே நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தியா கேட் அருகே ஜோத்பூர் அதிகாரிகள் விடுதியில் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' உறுப்பினர்களுடன் விரிவான விவாதம் நடத்தியதாகவும், மேலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக உத்திகள் வகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைத்து தேர்தல் தொடர்பாக கருத்துகள் கேட்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பாக அரசியலமைப்பு வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவது தொடர்பாகவும், ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் வரும் சூழ்நிலைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சர்வதேச சைகை மொழி தினம்: எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கும் சைகை மொழி!

'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' குறித்த குழு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டன. இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி காஷ்யப், ஹரீஷ் சால்வே மற்றும் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமல்படுத்த பிரதமர் மோடி விரும்புவதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நாளை தொடங்க உள்ள புதிய 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் என்னென்ன? - முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.