இடுக்கி: இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று இன்று மலைப்பாதையில் கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 58 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இடுக்கி மலையடிவாரத்தில் உள்ள சீயப்பாறைக்கும் நேரியமங்கலத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்தாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பேருந்து மலைப்பகுதியில் இருந்து 14-15 தூரத்தில் இருந்து கீழே உருண்டது. மூணாறில் இருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
பேருந்தில் 60 பேர் இருந்ததாக நடத்துனர் சுபாஷ் தெரிவித்தார். விபத்து நடந்தவுடன், உள்ளூர்வாசிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படும் - கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்