டெல்லி: மத்திய மேற்கு டெல்லி ஜிஎஸ்டி ஆணையரகத்தினருக்கு தேசிய தலைநகர் பகுதிகளில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜிஎஸ்டி ஆணையரகத்தினர் சோதனை மேற்கொண்டனர். அதில், தேசிய தலைநகர் பகுதியில் 831.72 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்தனர்.
மேலும், அவர்கள் முறைகேடாக புகையிலைப் பொருள்கள், குட்கா, பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்ததாகவும், அவர்கள் போதைப் பொருள்களை தடை செய்யப்பட்ட இடங்களில் விற்பனை செய்ததாகவும் கூறினர்.
இதையடுத்து, வரி ஏய்ப்பு தொடர்பாக ஜிஎஸ்டி ஆணையரகத்தினர் ஒருவரை கைது செய்து இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர் மீது பிணையில் வர இயலாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இரண்டு பிரபல தொழில் குழுமம் வரி ஏய்ப்பு... ரூ.170 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அதிரடி!