யாஸ் புயல் காரணமாகப் பெய்த கனமழையால், மேற்கு வங்கத்தில் வீடுகள், விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதுவரை புயலால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற ஒரு நபர் புயல் காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் மம்தா கூறுகையில், "புயல் காரணமாக மேற்கு வங்கம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. டிகா, தஜ்பூர், ஷங்கர்பூர், ராம்நகர், நந்திகிராம் உள்ளிட்ட பகுதிகள் அதிகப் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இதுவரை 15 லட்சம் மக்களை மேற்கு வங்க அரசு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புயல் சேதங்கள் குறித்தான முழுமையான விவரங்களைப் பெற எங்களுக்கு 72 மணி நேரமாவது தேவைப்படும். மேற்கு வங்கத்தில் சுமார் 14 ஆயிரம் பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு உடை, உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன " என்றார்.
இதையும் படிங்க: காவல் துறைக்கு உதவியாக வீதிகளில் களப்பணியாற்றும் இளம் பெண்கள்!