ETV Bharat / bharat

ஓடும் ரயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை - ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளை

பீகாரில் ரயிலில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளை...!

author img

By

Published : Nov 11, 2022, 10:39 PM IST

பாட்னா: காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. நேற்று (நவ.10) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துகொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் என்கிற தொழிலதிபர் ஒருவரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2 கிலோ தங்கம்) மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் திடீரென கலவுபோனது.

இதுகுறித்து தொழிலதிபரிடம் அரசு ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . ரயிலில் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரிடமிருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. ரயிலில் நன்கு உறங்கிய அவர் பாட்னா சந்திப்பில் எழுந்து பார்த்தபோது அவருடைய உடமைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே காவல்துறை தரப்பில் “ஓடும் ரயிலில் நகைகள் திருடப்பட்டது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது, பாட்னா ரயில்வே காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விஷயம் சற்று சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. இருப்பினும் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த தெளிவான விவரத்தை விரைவில் வெளியிடுவோம்” என்றனர்.

இதையும் படிங்க: மறக்கமுடியாத வரவேற்பு அளித்த "டைனமிக் சிட்டி" தொண்டர்களுக்கு நன்றி... பிரதமர் மோடி நெகிழ்ச்சி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.