ETV Bharat / bharat

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக நக்சல் கோட்டையில் வாக்குச்சாவடி.. சத்தீஸ்கர் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிரடி! - Naxalites

Polling station for first time since Independence: சத்தீஸ்கர், பஸ்தார் பகுதியிலுள்ள சந்தமேட்டா கிராமத்தில் நக்சலைட் கோட்டையாக இருந்ததால் இதுவரை நடைபெற்ற தேர்தலில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பின் முதன் முறையாக இந்த முறை அப்பகுதியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

once-a-red-bastion-chandameta-village-has-polling-station-for-first-time-since-independence
சுதந்திரத்தின் பின் முதல் முறையாக சத்தீஸ்கரில் நக்சலைட் கோட்டையில் வாக்குச்சாவடி அமைப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 8:28 PM IST

பஸ்தார் (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் கோட்டையாக இருந்த பஸ்தார் பகுதியிலுள்ள கிராமங்களில் முதல் முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தாரின் சந்தமேட்டா கிராமம், ஜக்தல்பூர் மாவட்டத்தில் வருகிறது. இந்த சந்தமேட்டா கிராமம் பல வருடங்களாக நக்சலைட் கோட்டையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த கிராமத்தில் காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது மேலும் சுதந்திர தினத்தன்று முதன் முறையாக இந்தியத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சந்தமேட்டா கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கும் போது, சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக எங்கள் கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு 335 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன்பு வாக்களிப்பதற்கு 6 கி.மீ மிகவும் ஆபத்தான மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சிந்த்கூர் கிராமத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டும். இதனால் மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி தங்களது சொந்த கிராமத்தில் வாக்களிப்பது சந்தோஷம் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா பெண்களுக்கு மாதம் 4,000 ரூபாய் - ராகுல் காந்தி அறிவிப்பு!

மேலும், சந்தமேட்டா கிராமத்தில் தற்போது உள்ள காவல் நிலையம் அருகே 200 மீட்டர் தொலைவில் நக்சலைட்டு பயிற்சி முகாம் இருந்ததாகவும் இங்கு நக்சலைட்டு பலர் பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிவித்தனர். மேலும், கடந்த ஒரு வருடம் முன்பு இப்பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடி அமைத்ததிலிருந்து கிராமத்தின் நிலை மாறியுள்ளது. எனத் தெரிவித்துள்ளனர்.

சந்தமேட்டா கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சி.ஆர்.பி.எப் (CRPF) கமாண்டர் ராஜூ நாம்தேவ் வாக் கூறும் போது, இங்குப் பல சவால்கள் இருந்தது தற்போது அவை அனைத்து மாற்றியமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் மேலும் நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராகி உள்ளோம். இங்குள்ள முழுப்பகுதிகளும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்திலுள்ள அனைத்து இடங்களிலும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும் இவர்களுடன் மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) ஜவான்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பஸ்தார் மாவட்ட ஆட்சியர் கே.விஜய் தயாராம் கூறும் போது, "சந்தமேட்டா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முதல் முறையாக நாங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர். இது அவர்களுக்கு இடையே மேலும் பாதுகாப்பான உணர்வை உறுதிப்படுத்தும்." எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.