ETV Bharat / bharat

வீதிவீதியாக சோப்பு விற்கும் ஐஸ்வர்யா - ரஜினி பட நடிகையின் அவல நிலை!

பல தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாததால் வீதிவீதியாக சோப்பு விற்று வருவதாக கூறியுள்ளார்.

தெருவில் சோப்பு விற்கும் ஐஸ்வர்யா- ரஜினி பட நடிகையில் அவல நிலை

author img

By

Published : Jun 17, 2022, 3:18 PM IST

தமிழ் சினிமாவில் 80-களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர்தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் பழைய படங்களில் நடித்த நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இவர் அதிக ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடனும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடனும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து உச்சத்தில் இருந்த ஐஸ்வர்யா தற்போது வாழ்வாதரத்திற்காக தெருக்களில் சோப் விற்று வருகிறார்.

இணையத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் வாழ்வாதரத்திற்காக மிகவும் சிரமப்படுவதாகவும், பட வாய்ப்பு எதுவும் இல்லை எனவும் கவலையோடு பேசியுள்ளார். அதில் இவர் பேசுகையில், 'எனக்கு வேலை எதுவும் இல்லை. எனக்கு பணத் தேவை உள்ளது. எனக்கு துணையாக யாரும் இல்லை, என் மகளும் திருமணம் முடித்து சென்றுவிட்டாள். எந்த வேலை செய்யவும் தயாராக உள்ளேன். எந்த நிறுவனத்தில் வேலை கொடுத்தாலும் செய்வேன்' எனக் கூறினார்.

சினிமாவில் ஒரு காலத்தில் ஜொலித்த ஐஸ்வர்யா, பல சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவரின் இந்த நிலைமையைப் பார்த்து அவருக்கு திரும்ப பட வாய்ப்புத் தர வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:தன் குரல் சரியில்லாததால் 'ரீ-டப்பிங்கில்' இறங்கிய அண்ணாச்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.