திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேரே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் -அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரள ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கத்தாரின், லுசைல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை, கேரள ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓணம், விஷூ உள்ளிட்ட பண்டிகை நாளன்று விற்பனையாகும் அதே அளவில் ஃபிஃபா கால்பந்து இறுதிப் போட்டி நாளில் மது விற்பனை நடந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: FIFA World Cup: அர்ஜென்டினாவுக்கு எத்தனை கோடி ரூபாய் பரிசு.. யாருக்கு தங்க காலணி.. முழு லிஸ்ட்..