18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் வழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும். நேரடியாக அரசு கரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று பதிவு செய்ய முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அரசு கரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வசதி குறிப்பாக அரசு கரோனா தடுப்பூசி மையத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு அதிக அளவில் ஒதுக்கீடு!