பாலியா: உத்தரப்பிரதேசத்தின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர், ஓம் பிரகாஷ் ராஜ்பஹார். பாலியா பகுதியில் நடைபெற்ற தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜ்பஹார், தன் கட்சியில் 10 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்பவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதாக அறிவித்தார்.
இந்த மூன்று ஆண்டுகளில் உறுப்பினராக சேரும் நபருக்கு ஏற்படும் போலீஸ் மற்றும் மாவட்ட ரீதியிலான பிரச்னைகளுக்கு அவர்களது வீடு தேடி சென்று உதவுவதாக அவர் தெரிவித்தார். மேலும் உறுப்பினர்கள் நன்கொடையாக 100 ரூபாய் தனியாக செலுத்தி செல்போன் மற்றும் எரிபொருள் செலவுக்கான சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
தொழிலாளர்கள் மத்தியில் ஓம் பிரகாஷ் ராஜ்பஹார் பேசும் 2 நிமிட 49 விநாடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜ்பஹாரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இது... கார்கில் போர் வீரருக்கு குடியுரிமையை நிரூபிக்கக்கோரி நோட்டீஸ்!