ETV Bharat / bharat

Omicron BA-2 உருமாறிய வைரஸ்: இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு பாதிப்பு - Omicron BA-2 உருமாறிய வைரஸ்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு ஒமைக்ரான் BA-2 உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Omicron BA-2 உருமாறிய வைரஸ்
Omicron BA-2 உருமாறிய வைரஸ்
author img

By

Published : Jan 24, 2022, 8:34 PM IST

மத்தியப் பிரதேசம்: இந்தூரில் நேற்று (ஜனவரி 23) ஆறு குழந்தைகள் உள்பட 16 பேருக்கு ஒமைக்ரான் BA-2 உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. நுரையீரலில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும். இந்தூரில் உருமாறிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு நுரையீரல் 15 முதல் 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது.

அதில் மூன்று பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மீதமுள்ள 13 பேர் முன்னெச்சரிக்கை மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே, இவர்களுக்கு நுரையீரல் ஒன்று முதல் 5 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மருந்தை அனுமதி பெற்று எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் BA-2 வைரஸ்

ஒமைக்ரான் BA-2 உருமாறிய வைரஸ் குறித்து மருத்துவர்களும் நிபுணர்களும் வெவ்வேறு கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு தரப்பினர் இந்த வைரஸ் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும்; மற்றொரு தரப்பினர் ஒமைக்ரான் தொற்றை ஒப்பிடும்போது தாக்கம் குறைவு எனவும் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனில் 426 பேர் பாதிப்பு

இந்தியா உள்பட 40 நாடுகளில் ஒமைக்ரான் BA-2 உருமாறிய வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிட்டனில் 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தூரில் கரோனா வைரஸ் தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி மன்றங்களுக்கே ஆளும் அதிகாரம் வேண்டும் - தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.