ETV Bharat / bharat

பூமியில் விழப்போகும் நாசா செயற்கைகோள் - இந்தியாவுக்கு பாதிப்பா..? - Nasa Satellite

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயற்கைகோள் பூமியில் விழப்போவதைக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா
நாசா
author img

By

Published : Jan 7, 2023, 11:02 AM IST

புளோரிடா: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 1984ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்சிக்காக செயற்கைகோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. 38 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து இந்த செயற்கைகோள் செயலிழிந்துவிட்டது.

இதனால் எந்த நேரத்திலும் செயற்கைகோள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக செயற்கைகோள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) நள்ளிரவில் விழ அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2.5 டன் எடை கொண்ட இந்த செயற்கைகோள் பூமியின் மீது விழும் நிலையில், சுற்றுவட்டப்பாதை கடப்பதற்குள் முக்கால்வாசி பாகங்கள் எரிந்து சாம்பலாகும் என்பதால் ஆபத்தானது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில பாகங்கள் பூமியின் மீது விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதால் மக்கள் யாரும் கவலைக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது நாசா. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா நாடுகளில் செயற்கைக்கோள் விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சமூக வலைதளங்களில் பலர் பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றனர்.

இந்தியாவில் விழும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த செயற்கைகோள், நாசாவின் பூமி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைகோள் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு வரை ஓசோன் மற்றும் வளிமண்டல அளவீடு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதே ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், தற்போது முற்றிலும் செயலிழந்துள்ளது.

இதையும் படிங்க: விபத்தை தவிர்க்கும் விஷேச ஹெல்மெட் - பள்ளி மாணவி கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.