ஆந்திரப் பிரதேசம்: முலுகு மாவட்டத்தில் அராசால் தடைசெய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைப் பிடித்து ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வெங்கடபுரத்தில் வாகனச் சோதனையின் போது இரண்டு வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
சுமார், 1.65 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பணத்தை உத்தரப் பிரதேசத்தில் மாற்றுவதற்காக கடத்த முயன்றுள்ளனர். இந்நிலையில், காவல்துறை சோதனையில் பிடிப்பட்ட சூர்யாபேட் மாவட்டத்தைச் சேர்ந்த பப்புல்லா நாகேந்திரபாபு, ஸ்ரீராமுலா நலிங்கேஸ்வர ராவ், மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த அஜய் சிங் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள், 9 செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்...கப்பலை மடக்கிப் பிடித்த கடற்படை