ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தி மொழி தினமான இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி திவாஸ் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதில், "அலுவல் மொழியான இந்தி, நாட்டை ஒற்றுமை எனும் கயிற்றால் இணைக்கிறது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். இந்தி உள்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காவும் மோடி அரசு பாடுபட்டு வருகிறது. இந்தி மொழியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் போராடிய பெரும் ஆளுமைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அனைவருக்கும் இந்தி திவாஸ் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டுதோறும் இந்தி தினத்தன்று, மத்திய அமைச்சர்கள் வாழ்த்துக் கூறுவது, இந்தி பேசாத பிற மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தி மொழி இந்தியாவை இணைப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைப் போராட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு