ஒடிசா மாநிலம், கோரபுட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுமித் துருக். ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மகனான இவர், தனது உயர் படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் விண்ணப்பித்திருந்தார். இவருக்கு வாய்ப்பும் கிடைத்ததுள்ளது.
மூன்று மணிநேரத்தில் 37 லட்சம்
ஆக்ஸ்போர்டில் படிக்க அவருக்கு 47 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில், அவரது பொருளாதார சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் தன் கல்விக்கு உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடன் ஒரு தொண்டு நிறுவனமும் சேர்ந்து சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த நிலையில், இதற்கு அபாரமான பலன் கிட்டியுள்ளது.
அந்நபர் கோரிக்கை வைத்த மூன்றே மணிநேரத்தில் அவருக்கு 37 லட்சம் வரை நிதி கிடைத்துள்ளது. இன்னும் பத்து லட்ச ரூபாய் மட்டுமே தேவை என்ற நிலையில், அது தனக்கு கிட்டுவிடும் என சுமித் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் தன்னைப் போன்று தேவைக்குள்ளாகும் இளைஞர்களுக்கு தான் நிச்சயம் உதவுவேன் எனவும் சுமித் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா!