ஒடிசா: நபரங்பூர் மாவட்டம், முருமதிஹி கிராமத்தில் வசித்து வரும் 21 வயதான பட்டியிலின பெண் திலாபாய், புதன்கிழமையில் இருந்து காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பாப்பாடஹண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை முருமாதிஹி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் வெட்டப்பட்டு கிடப்பதாக பாப்பாடஹண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்று பார்க்கையில் பெண் ஒருவர் 31 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின், விசாரணையில் அந்த பெண் காணாமல் போல திலாபாய் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பட்டியல் சமூக பெண் திலாபாய், கொலை குறித்து பாப்பாடஹண்டி காவல் நிலைய எஸ்டிபிஓ அதித்யா சென் தலமையிலான குழு தீவிர விசாரணை மேற்கொண்டனர். திலாபாயை 31 துண்டுகளாக் வெட்டி கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் என விசாரணையில் தெரிந்த நிலையில் நேற்று (நவ.26) அந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "முருமதிஹி பகுதியில் வசித்து வரும் சந்திர ராட் என்பவருக்கு திருமணமாகி ஷியா என்ற மணைவி உள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த 21 வயதான பட்டியிலின பெண் திலாபாயுடன் சந்திர ராட், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், திலாபாய், சந்திர ராட்டை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவ்வப்போது வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சந்திர ராட் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திலாபாய் சந்திர ராட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சந்திர ராட் வீட்டில் அவரது மனைவியும் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, திலாபாய் சந்திர ராட்டை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் திலாபாய்யை கூர்மையான கத்தியால் வெட்டியுள்ளனர். உயிரிழந்த திலாபாயை அருகில் உள்ள வனப்பகுதியில் புதைக்க திட்டமிட்ட தம்பதியினர், சந்தேகம் வராமல் இருக்க திலாபாயை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
மேலும், இது குறித்து பாப்பாதண்டி துணை காவல் காண்காணிப்பாளர் ஆதித்யா கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக தம்பதியினரை கைது செய்துள்ளோம். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் கொலை செய்த தம்பதியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஆரோக்கிய மந்திர்' ஆகும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்..! திடீர் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு!