தும்கூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தின் கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் வீட்டின் முன்னே தேசிய மாணவர் படையினர் சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் கர்நாடக பாடத்திருத்த திட்டக்குழுவின் தலைவர் ரோஹித் சக்கரதீர்த்தாவை பதவியிலிருந்து நீக்குமாறு கோஷமிட்டனர்.
இவர்களுக்கு அந்த அமைப்பின் தலைவர் கீர்த்தி கணேஷ் தலைமை தாங்கினார். சில நாள்களுக்கு முன் ரோஹித் கர்நாடக மாநிலத்தின் பாடலை இயற்றிய கூவேம்புவை அவமானப் படுத்துமாறு பேசியதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பற்றி கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவ படையின் உறுப்பினர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அமைச்சரின் வீட்டின் மீது தீ வைக்க முயன்ற 15 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பெரும் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘இது மாதிரியான குற்றச் செயல்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசு இந்த வன்முறைக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ எனக் கூறினார்.
காவல்துறையினர் விசாரணையில் போராட்டக்காரர்களின் இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு தேசிய மாணவர் படையின் தலைவர் பில்வான் அலி ரகமத் காரணம் எனவும், இதற்கு சதி திட்டம் தீட்டியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் 5 பேர் பெங்களூருவைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:யூ-ட்யூபில் இலவச கல்வி: டிஎஸ்பியிடம் கல்வி பயின்ற மாணவர்கள் 22 பேர் போட்டித் தேர்வில் வெற்றி!