புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கம் சட்டப்பேரவைத் தேர்தல் 2021 அறிக்கையை இன்று (மார்ச் 31) வெளியிட்டது. ராஜ்பவன் தொகுதியில் பரப்புரையில் மேற்கொள்ளும்போது இதனை அக்கட்சி நிறுவனர் ரங்கசாமி வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
- புதுச்சேரியில் குப்பை வரி ரத்துசெய்யப்படும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா சேவை.
- புதுச்சேரி முதல் தர சுற்றுலா மையமாக உருவாக்கப்படும்.
- விமான தளங்களைத் தொடரிணைப்புப் பயணச் சேவை மூலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் மத்திய அரசுத் திட்டத்தில் காரைக்காலையும் இணைத்து விமான சேவை தொடங்க வலியுறுத்தப்படும்.
- இதன்மூலம் சுற்றிலும் இருக்கும் வேளாங்கண்ணி நாகூர் திருநள்ளாறு நவக்கிரக தலங்களுக்குப் பயணிகளின் வருகையை அதிகரித்து ஆன்மிகச் சுற்றுலாவிற்கு வலுசேர்க்கும்.
- தரைவழி தடம் மூலம் மின்சார விநியோகம் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- புனித ஹஜ் பயணிகளுக்குப் பயணச் செலவுடன் வழிச் செலவுக்காக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும்.
- மாநிலத்தின் அத்தனைக் குடும்பங்களுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்படும்.
- பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்குப் பாடத் திட்டங்கள் அடங்கிய கைக்கணினியும் (டேப்லெட்) 11, 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி (லேப்டாப்) ஆகியவை வழங்கப்படும்.
- மாநிலத் தகுதி மத்திய அரசை அணுகிப் பெறுவது இந்த இலக்கினை அடைய முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பயணத்தைத் தொடர உறுதி ஏற்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடுப்பில் டார்ச் லைட்டை வீசியெறிந்த கமல்ஹாசன்