புதுச்சேரி: அகில இந்திய என்ஆர்காங்கிரஸ் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது. கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடக்க விழா நடைபெற்றது. கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி கலந்துகொண்டு ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் நீடித்துவருவதாகவும், வருகிற 31ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸில் இருந்து விலகிய நம்ச்சிவாயம் பாஜகவில் இணைந்துள்ளார். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில்கள் பேச்சுவார்த்தையின்போது தெரியும் என்றார்.
இதையும் படிங்க: என்ஆர் காங்கிரஸ் மண்குதிரை; அது கரை சேராது: கம்யூனிஸ்ட் விமர்சனம்