ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்! - குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல்
author img

By

Published : Jun 15, 2022, 5:00 PM IST

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 15) தொடங்கியுள்ளது. ஜூன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 30, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜூலை 2ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மம்தா ஆலோசனை: குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள். அதன்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள எம்.பி.க்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அதே வேளையில், வாக்கு எண்ணிக்கை டெல்லியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள் என்றும்; அதேவேளையில் எதிர்க்கட்சியினர் யாரை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாகவும், எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 22 கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தவகையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: குடியரசுத்தலைவர் தேர்தல்... மம்தா கடிதம்... குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.