வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் "இந்தியா மற்றும் உலகின் வளர்ச்சி: மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியா ஐடி துறையில் வல்லுநராக கருதப்படுகிறது. ஆனால், நம் அண்டை நாடு சர்வதேச பயங்கரவாதத்தின் நிபுணராக அறியப்படுகிறது.
பாகிஸ்தானைப் போல வேறு எந்த நாடும் மோசமான பயங்கரவாத பாதையில் செயல்படுவதில்லை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்பு பயங்கரவாதத்தை உலக நாடுகள் பொருட்படுத்தவில்லை.
இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளை இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. பயங்கரவாதத்தை உலக நாடுகள் தீவிரமான பிரச்சினையாக கருதுகின்றன. இது பிரதமர் மோடி அரசாங்கத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி" என்றார்.