ETV Bharat / bharat

கார்கிவ்வில் உள்ள மாணவர்களை இந்தியத் தூதரகம் அணுகவில்லை - உயிரிழந்த மாணவனின் தந்தை - ரஷ்யா உக்ரைன் போரில் இந்திய மாணவர் மரணம்

கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக இந்தியத் தூதரகத்தில் இருந்து யாரும் அணுகவில்லை என உயிரிழந்த மாணவனின் தந்தை சேகரப்பா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அணுகவில்லை
அணுகவில்லை
author img

By

Published : Mar 1, 2022, 7:40 PM IST

ஹவேரி (கர்நாடகா): ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான போர் இன்று(மார்ச்.1) 6ஆவது நாளாகத் தொடர்கிறது. இன்று கார்கிவ் நகரில் ரஷ்யப்படை நடத்தியத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடகா மாநில மாணவன் நவீன் சேகரப்பா ஞானகவுடா உயிரிழந்தார். நவீன் கார்கிவ் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

நவீன் உயிரிழந்த செய்தியறிந்து ஹவேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் தந்தை சேகரப்பா கூறுகையில், கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக இந்தியத் தூதரகத்தில் இருந்து யாரும் அணுகவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

மாணவனின் உறவினர் உஜ்ஜனகவுடா கூறுகையில், "நவீன் பங்கரிலிருந்து (பதுங்கு குழி) வெளிவந்து ஏடிஎம்-இல் பணம் எடுத்து, உணவு வாங்குவதற்காக வந்த போது, தாக்குதலில் உயிரிழந்தார். இன்று காலை பங்கரில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை என்று எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.

மாணவனின் தந்தை சேகரப்பா, மகனை மருத்துவராக்க வேண்டும் என்று விவசாயம் செய்து படிக்க வைத்தார். இந்த நிலையில் தாக்குதலில் மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியர்கள் கீவ் நகரை விட்டு வெளியேறுங்கள் - தூதரகம் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.