டெல்லி: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் 22 அறைகள் (Taj Mahal 22 doors case) நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன. இந்த அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுதொடர்பாக தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும். தாஜ்மஹால் பழங்காலத்தில் சிவன் கோயிலாக இருந்தது.
இதனை தேஜோ மஹாலயா என்று அழைத்தனர் என்று கூறி பாஜக நிர்வாக ரஜீனீஷ் சிங் என்பவர் கடந்த மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகாய், "தாஜ்மஹாலில் இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறைக்கு மனு அளித்திருந்தார். இதற்கு தொல்லியல் துறை மறுப்பு தெரிவித்து, தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் கிடையாது என்று பதிலளித்துள்ளது.
இதையும் படிங்க: தாஜ்மஹாலின் 22 அறைகளை திறக்க மறுப்பு