டெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர் மகேஷ் போடார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு விவசாயக்கடன் தள்ளுபடிக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 2020 மார்ச் முதல் 2020 மே வரை வணிக வங்கிகளில் கடன் வாங்கிய கடனாளர்களுக்கு அனைத்து தவணைகளையும் செலுத்த 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கடன்களின் தவணை செலுத்தும் காலம் முடிந்தபிறகும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில் மார்ச் 1லிருந்து மே 31 வரை கடன் கொடுத்த வங்கிகள் பயனாளர்களுக்கு கடன் தவணைச்செலுத்தும் காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. மேலும் மே 23 வரை, தவணை செலுத்த தவறியவர்களுக்கும் கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்ததாக தோமர் அளித்த எழுத்துப் பூர்வ பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பயிர்களின் பல்வேறு கால மற்றும் விளைச்சல் உள்ளிட்டப்பல காரணிகளைப்பொறுத்து தான் பயிர் முறைகளை பன்முகப்படுத்த உறுதி செய்ய முடியும் எனவும், அந்தந்த பகுதியின் விவசாய காலநிலை நிலைமைகள், வளங்களின் இருப்பு, சந்தை சக்திகள், விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலைமைகள், விவசாய விளைபொருட்களின் தேவை மற்றும் வழங்கல் போன்றவைகளின் அடிப்படையில் அமையும் என மத்திய அமைச்சர் கூறினார்.
அதன்படி, இந்திய அரசு பல்வேறு பயிர் முறைகளை ஊக்குவித்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் (NFSM) கீழ் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், கரடுமுரடான தானியங்கள், ஊட்டச்சத்து தானியங்கள் மற்றும் வணிகப் பயிர்கள், NFSM-எண்ணெய் வித்துக்களின் கீழ் எண்ணெய் வித்துகள், தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தோட்டக்கலைப் பயிர்கள் (MIDH) ஆகியவை அடங்கும் எனவும் தோமர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மைனருடன் ஒருமித்த உடலுறவும் பாலியல் வன்புணர்வே- தெலங்கானா உயர் நீதிமன்றம்!