ETV Bharat / bharat

கோவிட்-19 ரிப்போர்ட் இல்லயா? கவர்னருக்கு நோ எண்ட்ரி சொன்ன கோயில்!

கோவிட்-19 தொற்று இல்லை என்ற அறிக்கையை கொண்டுவராததால் ஓடிசா ஆளுநரை பூரி ஜகன்நாதர் ஆலயத்திற்குள் கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

author img

By

Published : Jan 4, 2021, 1:14 PM IST

கனேஷி லால்
கனேஷி லால்

ஒடிசா மாநில ஆளுநரான கனேஷி லால் அம்மாநிலத்தின் புகழ்பெற்ற ஆலயமான பூரி ஜெகன்நாதர் கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகைத் தந்தார்.

கோவிட்-19 பரவல் காரணமாக ஆலயம் ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று(ஜன 3) பொதுமக்கள் தரிசனத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். தங்களுக்கு தொற்று இல்லை என்ற விவரத்தை கோயில் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை வருகைக்கு 96 மணிநேரத்திற்குள் செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறத்தப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் பரிசோதனை செய்து கொள்ளாமல் வருகை தந்துள்ளார். மாநிலத்தின் தலைமை பொறுப்பிலிருக்கும் ஒருவரே விதிமுறைகளை மீறி வந்த நிலையில், அவர் கோயிலுக்கு தரிசனத்திற்காக அனுமதிக்கப்படவில்லை. அரசு உத்தரவை மதிக்கும் விதமாக வெளியிலிருந்தே வணங்கிவிட்டு ஆளுநர் திரும்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக விதிமுறைகளை தளர்த்தாமல் முறைப்படி செயல்பட்ட ஆலய நிர்வாகத்திற்கும், அரசு அலுலவர்களுக்கு பாரட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: மலையாளத்தின் மூத்தக் கவிஞர், பாடலாசிரியர் அனில் பனச்சூரான் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.