ETV Bharat / bharat

திருநங்கைகள் பைலட் உரிமம் பெற மருத்துவ பரிசோதனை தடையாக இருக்காது -  அமைச்சர் விகே சிங்

விமான விதிகளின்படி தகுதி பெற்ற திருநங்கைகள் பைலட் உரிமம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை ஒரு தடையாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Govt
Govt
author img

By

Published : Jul 25, 2022, 8:47 PM IST

டெல்லி: கேரளாவைச் சேர்ந்த ஆடம் ஹாரி நாட்டின் முதல் திருநம்பி விமானி என்ற பெருமைக்குரியவர். பயிற்சி விமானியாக இருக்கும் ஆடம் ஹாரி, பைலட் உரிமம் கோரி விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தில் விண்ணப்பித்திருந்தார். எல்லா சோதனைகளிலும் வென்ற ஆடம் ஹாரிக்கு, மருத்துவ பரிசோதனை சவாலாக இருந்தது.

அவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்பதால், அவர் செய்துள்ள ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை, உடல் மற்றும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக்கூறி, அவருக்கு உரிமம் வழங்க மறுத்துவிட்டனர். இதற்கு ஹாரி கடும் கண்டனம் தெரிவித்தார்.

தன் பாலினத்திலிருந்து பிற பாலினத்திற்கு மாறுகிறவர்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சிகிச்சையை நோய் போல கருதுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தகுதியுடைய திருநங்கைகள் பைலட் உரிமம் பெற மருத்துவ பரிசோதனை தடையாக இருக்காது என விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் விகே சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், "விமான விதிகள், 1937-ல் குறிப்பிட்டுள்ளபடி வயது, கல்வித்தகுதி, அறிவு, அனுபவம் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு இணங்க, திருநங்கைகள் பைலட் உரிமம் பெறுவதில் எந்த தடையும் இல்லை.

ஹார்மோன் மாற்று சிகிச்சையால், உடல்- மன ரீதியான எதிர்வினைகள் இல்லை என்றால், திருநங்கைகளுக்கு மருத்துவ பரிசோதனையிலோ, உரிமம் வழங்குவதிலோ எந்தவித சிக்கலும் இல்லை. ஹார்மோன் மாற்று சிகிச்சையை காரணமாக வைத்து விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது.

அதேநேரம் விண்ணப்பதாரர் செய்துள்ள ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை, அவருக்குப் பாதகமான அறிகுறிகள் அல்லது எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது என அவர் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார். இதனிடையே ஆடம் ஹாரியை மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கும்படி விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.