பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம் , காங்கிரஸுடன் இணைந்து மகாகத் பந்தன் என்னும் புதிய கூட்டணியினை அமைத்து, புதிய ஆட்சி அமைத்தது.
முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். 243 சட்டப்பேரவைத்தொகுதிகள் கொண்ட பிகாரில் மகாகத் பந்தன் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை போதுமானதாகும்.
இந்நிலையில் சட்டசபையில் நிதிஷ்குமார் குரல் வாக்குகெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபித்தார். அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் அவையை விட்டு வெளியேறினர். இதையடுத்து வருகிற 26ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பல கோடி மதிப்புள்ள நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சரின் குடும்பம்