ETV Bharat / bharat

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக பதவியேற்றார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்! - நாடாளுமன்ற தேர்தல்

Bihar CM Nitish Kumar becomes JDU president: ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் செயற்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nitish-kumar-becomes-jdu-president
பீகாரில் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் தலைவராக பதவியேற்றார் நிதிஷ்குமார்..
author img

By PTI

Published : Dec 29, 2023, 8:47 PM IST

டெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளத்தின் (JDU) தலைவராக இன்று (டிச.29) நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளத்தின் (JDU) தலைவராக நியமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு, கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் கட்சித் தலைவருக்கான பதவி காலியானது. இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமை பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, “ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங், அடுத்த தலைவராக நிதிஷ்குமார் பெயரை முன்மொழிந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் இரண்டு நாள் கூட்டத்தின்போது, லாலன் சிங் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், கூட்டத்தில் பேசிய லாலன் சிங், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதியின் வேலை காரணமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவராக நிதிஷ்குமார் பெயரை முன்மொழிந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக நிதிஷ்குமார் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவதன் மூலம் கூட்டணி, கூட்டணி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது போன்ற கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் எடுக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறாரா சோனியா காந்தி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.