ETV Bharat / bharat

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி... பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Patna
Patna
author img

By

Published : Aug 1, 2023, 7:42 PM IST

பாட்னா : பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மாநில அரசு, கணக்கெடுப்பு பணிகளுக்கு அங்கன்வாடி உள்ளிட்ட அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி வந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பணி நடந்து முடிந்த நிலையில் 2வது கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தனியார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரியும் முறையிடப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2ஆம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி முடிவடைய 11 நாட்களே இருந்த நிலையில் கணக்கெடுப்பு பணிக்கு தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணை பாட்னா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் அமர்வில் இன்று (ஆகஸ்ட். 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதோடு மாநில அரசு தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள தீர்ப்பு வழங்கினர். இதன் மூலம் மீண்டும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி விரைவில் துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நாகாலாந்து, மிசோரம் பட்ஜெட்டுகளை மிஞ்சும் எம்.எல்.ஏக்கள் சொத்து மதிப்பு! திமுக எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு இவ்வளவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.