பாஜகவை மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியிலிருந்து குவாலியருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது.
சிந்தியாவின் பாதுகாப்புக்குச் சென்ற காவல் துறையினர் அவரது வாகனத்திற்குப் பதிலாக அதே தோற்றத்தில் இருந்த வேறு வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனால் காவல் துறை பாதுகாப்பு இல்லாமலேயே சிந்தியா குவாலியர் சென்றடைந்தார்.
இந்த அலட்சியம் காரணமாக 14 காவலர்களை உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்து மோரேனா காவல் கண்காணிப்பாளர் லலித் ஷாகியாவர் உத்தரவிட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் சிவராஜ் சிங் சவுகான், துணை உதவி ஆய்வாளர் (ASI) வினோத் சிங், தலைமைக் காவலர் பதான் சிங், காவலர்கள் ஜிதேந்திர சிங், ராகேஷ் ராதோர், சாந்த்ராம், அனில் யாதவ், ஓட்டுநர் தாவர் தாகூர், ராம்பிஹாரி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதையும் படிங்க: 'இருக்கு... ஆனா இல்ல' - குழப்பும் சிந்தியாவின் கரோனா ரிப்போர்ட்!