ETV Bharat / bharat

கேரளாவில் வேலை தேடிச்சென்ற சிறுமிக்குப் பாலியல் தொல்லை - 9 பேர் கைது - கேரளாவில் கொடூரம்

கேரளாவில் 17 வயது சிறுமி பல மாதங்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு பெண்மணி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரைத் தேடி வருகின்றனர்.

Nine
Nine
author img

By

Published : Nov 17, 2022, 8:55 PM IST

கொச்சி: கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமியுடன் நட்பாகப் பேசியுள்ளார். பின்னர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அருகில் இருந்த தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்த விடுதியின் உரிமையாளர் உள்பட மேலும் மூவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த விடுதியிலிருந்து தப்பித்து மீண்டும் பேருந்து நிலையம் வந்தபோது, மற்றொரு நபர் தான் வேலை தருவதாகக்கூறி சிறுமியை அழைத்துச்சென்றுள்ளார். அவர் மற்றொரு விடுதிக்கு அழைத்துச்சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கும் விடுதி உரிமையாளர் உள்பட இருவர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.

பிறகு, பாலியல் தொழில் சார்ந்த தொடர்பு உள்ள பெண்மணி ஒருவரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்மணியின் தொடர்பில் இருந்த பலரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்ததாகத் தெரிகிறது.

பாலியல் கும்பலிடமிருந்து தப்பித்த சிறுமி, தனது வீட்டிற்குத் திரும்பிய நிலையில், இந்த பாலியல் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒரு பெண்மணி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 35 துண்டுகளான லிவிங் டூகெதர் காதலி; அமெரிக்கன் க்ரைம் தொடர் போல் திட்டம் தீட்டிய காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.