ETV Bharat / bharat

புதுச்சேரியில் தொடங்கிய இரவு நேர ஊரடங்கு

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை, 5 மணிக்குமேல் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடங்கிய இரவு நேர ஊரடங்கு
புதுச்சேரியில் தொடங்கிய இரவு நேர ஊரடங்கு
author img

By

Published : Apr 21, 2021, 10:30 AM IST

புதுச்சேரியில் கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இரவு நேர ஊரடங்கு

அதனடிப்படையில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்றிரவு (ஏப். 20) 10 மணிக்கு காவல் துறையினர் அனைத்துக் கடைகளையும் அடைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து, கடைகள், வணிக நிறுவனங்களின் ஊழியர்களை வெளியேற்றி கடைகளை அடைத்தனர்.

இதேபோல், உணவு விடுதியிலிருந்து பொதுமக்கள் பார்சல்களை வாங்கிச் சென்றனர். காவலர்களின் அறிவுறுத்தலையடுத்து அனைத்து உணவகங்களும் மூடப்பட்டன. பேருந்து நிலையங்களில் 10 மணிக்குமேல் எந்தப் பேருந்தும் இயக்கப்படவில்லை.

எச்சரிக்கை

காலை 5 மணிக்குமேல் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு நேர ஊரடங்கைக் கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.