பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் குண்டர்கள் பலர் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பாதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் பஞ்சாப் முழுவதும் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் தீவிரவாத தொடர்பு உள்ள குண்டர்கள் பிடிபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சாபில் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தினர். அதில் முக்கியமாக ஃபாசில்காவில் உள்ள கேங்க்ஸ்டர் லோரிஸ் பிஷ்னோய் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து பக்வான்பூர் கிராமத்தில் உள்ள ஜக்கு பகவான்பூரியாவின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தியது.
அமிர்தசரஸில் உள்ள குண்டர்கள் வீட்டில் NIA இன்று (செப்-13)காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இது தவிர கோட்டக்புரா, ஃபரித்கோட் மற்றும் ராஜ்புரா ஆகிய இடங்களில்பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. என்ஐஏ-வின் இந்த பெரிய நடவடிக்கை மூலம் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சித்து மூஸ் வாலா கொலை வழக்கு... என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை