டெல்லி: கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்ட பாஜக இளைஞரனி தலைவர் பிரவீண் நெட்டாரு படுகொலை செய்யபப்ட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 20 பேருக்கு எதிராக என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பிரவீண் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள், அவர்களில் 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 20 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஎஃப்ஐ அமைப்பு தனது முக்கிய கொள்கையாக தீவிரவாதத்தை பரப்ப திட்டமிட்டு இருந்ததாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ திட்டமிட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்காக கொலைகார படை என்ற ரகசிய படையை உருவாக்கி அதில் இருப்பவர்களுக்கு அதிநவீன பயிற்சி அளித்து வந்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிரிகளாக கருதப்படுபவர்களை கொலை செய்யவும் தீவிரவாதத்தை பரப்பவும் இந்த பயங்கரவாத குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீண் நெட்டாருவை கொலை செய்ய பெங்களூரு, சுல்லியா, பெல்லாரே ஆகிய பகுதிகளில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல கூட்டங்கள் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மத்தியில் பயத்தை உருவாக்க இந்தக் கொலையை பிஎஃப்ஐ அமைப்பினர் செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தரை தட்டியதா கங்கா விலாஸ்?.. கப்பலுக்குள் முடங்கிய சுற்றுலா பயணிகள்..