டெல்லி : மிசோரம் வெடிபொருள் பறிமுதல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அலுவலர்கள் சனிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு விசாரணையை உள்துறை அமைச்சகத்திடம் (MHA) ஒப்படைத்த பிறகு, என்ஐஏ அலுவலர்கள் வியாழக்கிழமை (ஜூலை 29) விசாரணையை எடுத்துக்கொண்டனர்.
ஜூலை 26ஆம் தேதியன்று மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையே எல்லை தகராறு தொடங்கிய நேரத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அஸ்ஸாம் போலீசார் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்.
அப்போது அங்கு ஆறு பெட்டிகளில் 3,000 சிறப்பு டெட்டனேட்டர்கள், 37 பாக்கெட்டுகளில் 925 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், நான்கு பெட்டிகளில் 2,000 மீட்டர் நீளமுள்ள ஃப்யூஸ், மற்றும் 63 சாக்கு வெடி பொருள்கள், ஒவ்வொரு சாக்கிலும் தலா 10 பாக்கெட்டுகள் கிளாஸ் II வகை - ZZ வெடிக்கும் பவுடர்கள் (மொத்தம் 1.3 டன்) பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வெடிபொருள்கள் மிசோரமிலிருந்து மியான்மருக்கு கொண்டு செல்லப்பட்டதாக அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க : எல்லையில் பதற்றம்: காவல் மற்றும் துணைராணுவப்படையினர் 6 பேர் உயிரிழப்பு